தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று(30) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரு. மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின்படி இன்று(30) அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
திரு இரா. சம்பந்தன் வேறு எந்தவொரு அடிப்படையிலும் இந்த சந்திப்பில் பங்குபெறவில்லை.
மேலும் இச்சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை. இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்..” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.