பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தான் கடுமையாக எதிர்ப்பதாக, மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா என, ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சரமாரியாகக் கேட்கப்பட்ட கேள்விகளை நிராகரித், அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க;
“நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான இயலுமை இல்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இறுதியான உத்தியோகபூர்வமான தீர்மானம் எதனையும் இதுவரையிலும் எடுக்கவில்லை” என தெரிவித்திருந்தார்.