பிரதமர் மீது நம்பிக்கை வெளியிட்டு ஐ.தே.க MP’க்கள் 80 பேர் கையெழுத்து….

பிரதமர் ரணில் விக்கிரமசிக்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை ஆவணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 இற்கும் மேற்பட்டோர் நேற்று(22) கையெழுத்து இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார;

“..ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை முன்வைத்த அதேசமயம், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று(22) பாராளுமன்ற வளாகத்தில் கூடி கலந்துரையாடும் குழு அறையில் பிரதமர் மீது நம்பிக்கை தெரிவித்து ஆவணமொன்றிற்கு கையெழுத்திட்டனர்..” என தெரிவித்திருந்தார்.

தற்போது வெளிநாடு பயணமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையோர் கையொப்பம் இட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை தோல்வியடையச் செய்வதில் குறித்த உறுப்பினர்கள் ஏகமனதான தீர்மானத்தில் உள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டிருந்தார்.