பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம்(24) விசேட அறிவிப்பொன்றினை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது 69வது பிறந்த தினம் நாளை(24) கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றே தலைமைப் பதவியில் இருந்து பிரியா விடைபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு தசாப்தங்களுக்கு அதிக காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்த தலைமை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், நல்லாட்சி அரசின் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களும் பிரதமர் பதவியில் இருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.