பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) அதிகாலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்புக்கிணங்க அவர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இது தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
சமகாலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் நாட்டில் முதலீட்டு வாய்ப்பு தொடர்பாகவும் பிரதமர் இதன்போது அவுஸ்திரேலிய அரச பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
பிரதமருடன் இந்த விஜயத்தில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டுள்ளனர்.