நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நல்ல பிரதிபலன் கிடைத்தால் திலான் சமரவீரவை துடுப்பாட்ட ஆலோசகராக தொடர்ந்தும் வைத்திருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் குழு தீர்மானித்துள்ளது.
அந்நாட்டு கிரிக்கெட் குழுவானது இதற்கு முன்னர் குறிப்பிடுகையில்; நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு துடுப்பாட்ட ஆலோசகராக திலான் சமரவீரவை நியமித்திருந்தனர்.
பங்களாதேஷ் சர்வதேச கிரிக்கெட் குழுவின் பிரதான பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க பணியாற்றுகிறார்.
பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.