கொழும்பு பயங்கரவாத விசாரணைப் தடுப்புப் பிரிவின் காவலில் உள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறை கடந்த வௌ்ளிக்கிழமை(28) சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த அறைக்கு சீல் வைப்பதற்கு முன்பாக, அங்கிருந்த 2 மடிக் கணனிகளை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா சூழ்ச்சி செய்ததாக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.