ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா எந்நேரத்தில் வேண்டும் என்றாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த படுகொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் குரல், அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, குறித்த அழைபேசி உரையாடலில் உள்ள குரல், நாலக சில்வாவின் குரல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகவே, பிரதிப் பொலிஸ்மா அதிபர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என பொலிஸ் உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.