பிரதியமைச்சர் மனுஷவுக்கு எதிராக வலுப்பெறுகிறது விசாரணைகள்

பிரதியமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

2015ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதியன்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் காண்பித்ததாக கூறப்படும் த ஹிந்து(The Hindu) நாளிதழ், போலியானவை என்ற அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறித்த செய்தித்தாளில் தாம் அதிகாரத்துக்கு வந்தால், ஈழத்தை பெற்றுத் தருவதாக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை கோடிட்டு வெளியான ஹிந்து செய்தித்தாளை மனுஷ தொலைக்காட்சியில் காண்பித்தார்.

எனினும் அன்றைய திகதியில் அவ்வாறான செய்தி ஒன்று த ஹிந்துவில் வெளியாகவில்லை என்றும் இது ரணில் விக்ரமசிங்கவின் அரசியலுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் கூறி தற்போதைய பிரதியமைச்சர் (அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்) அஜித் பெரேரா முறைப்பாட்டை செய்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே மனுஷவின் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.