பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தென் மாகாண சபை அமைச்சர் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று(25) உத்தரவிட்டுள்ளது.
குறித்த லங்காபுத்தர அபிவிருத்தி வங்கியில் மாகாண அமைச்சர் டி.வீ உபுல் பெருந்தொகை பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்டு செலுத்தவில்லை என ரஞ்சன் ராமநாயக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது குற்றம் சுமத்தியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தென் மாகாண சபை அமைச்சர் டி.வீ உபுல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்றும் இதனால் தமது நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து 500 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு கோரி ரஞ்சனுக்கு எதிராக உபுல் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.