பசறை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இருந்த 21 வருடம் பழமைவாய்ந்த சந்தன மரம் ஒன்று, திருட்டு முறையில் நேற்று இரவு வெட்டிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில குழுவினரே இவ்வாறு திருட்டு முறையில் வெட்டி சென்றுள்ளதாக பசறை காவற்துறை தெரிவிக்கின்றனர்.
முன்னாள் மாவட்ட செயலாளரினால் 1995 ஆம் ஆண்டு குறித்த சந்தன மரம் நாட்டப்பட்டதாக பசறை பிரதேச செயலாளர், நிமேஷா வர்னசிங்க தெரிவித்தார்.
15 அடி உயரமான குறித்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளை வெட்டி, தண்டினை மாத்திரம் திருடி சென்றுள்ளதகாவும் எமது செய்தி பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பசறை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்