பிரபலங்களை தொடர்ந்து விஜய்யும் அரசியலில்…

நடிகர்களான ரஜினி, கமலை தொடர்ந்து, நடிகர் விஜயும், அரசியலில் குதிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

தமிழகத்தில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் நாற்காலிக்கு, திரையுலகினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ரஜினி, கமல் என, உச்ச நடிகர்கள், அரசியல் அறிவிப்பை வெளியிட்டனர். இருவரும், விரைவில், தீவிர அரசியலில் இறங்க உள்ளனர். இதற்கிடையே விஷாலும், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு கொடுத்தார்.

இந்நிலையில், பல ஆண்டுகளாகவே அரசியலில் ஆர்வம் காட்டி வரும் விஜய், புதிய இணையதளம் ஒன்றை, சத்தமில்லாமல் துவக்கி உள்ளார். ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரிலான, அந்த இணையதளம் மூலம், ரஜினி பாணியில், உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் துவங்கியுள்ளன.