பிரபல அமெரிக்க தொலைக்காட்சி மொடல் நடிகை கிம் மர்ம நபரின் துப்பாக்கி முனையில்..

புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி மொடல் நடிகை கிம் கர்தாஷியன் பாரிஸ் உணவகம் ஒன்றில் மர்ம நபரால் துப்பாக்கி முனையில் பிணைய கைதியாக பிடித்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

கிம் கர்தாஷியன் சில படங்களிலும் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்த பிரபலமான நடிகையாக திகழ்கிறார்.

ஞாயிற்று கிழமை(02) அன்று பாரீசில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொள்ள தன் குடும்பத்தாருடன் வந்த அவர், அங்கிருந்த ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக அவன் தன் காரை விட்டு இறங்கும் போது பொலிஸ் உடையில் வந்த ஒரு மர்ம நபர் துப்பாக்கி முனையில் கிம் கர்தாஷியனை கடத்த முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி இனா டிரிக்கிகொஸ் என்னும் நபர் CNN சேனலுக்கு அளித்த பேட்டியில், கிம் கர்தாஷியனை அந்த மர்ம நபர் அடிக்க முற்பட்டான். ஆனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. கிம்மிடம் அந்த நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயற்சித்தானா? என்பது தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

Meadows NYC என்னும் இசை நிகழ்ச்சி நடத்தும் அமைப்பு இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. மேலும், கிம் தனது டுவிட்டர் பக்கத்தில், ’ My security is a G’ என குறிப்பிட்டுள்ளாரே தவிர இந்த சம்பவம் குறித்து எதுவும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.