பிணை முறி விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் மூன்று முக்கிய அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் இருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனக் கூறப்படுகிறது.
இவர்களிடம் பெறப்படும வாக்குமூலங்களுக்கு அமைய பிணை முறி விவகாரம் தொடர்பான விசாரணகைளை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிய வருகிறது.
####