பிரபல ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோ காலமானார். உயிரிழக்கும் போது இவருக்கு வயது 75 ஆகும். மேலும் பீபீசி ஊடக சேவையின் கொழும்பு நிருபராக இவர் நீண்ட காலம் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த அவரின் பூதவுடல் பெலவத்தையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை பெலவத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.