இலங்கையில் பிரபல கலைஞரான ஜக்சன் அந்தோனி பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் இவர் அங்கு வருகை தந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீர் நிரப்பும் நிகழ்வன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்வில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிதொடர்பான விசாரணைக்காகவே ஜக்சன் அந்தோனி அங்கு ஆஜராகியுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது