பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி இனை சந்தித்தார் குட்டி மெஸ்ஸி..(Photos)

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 வயது சிறுவனான முகமது அகமதியை மெஸ்ஸி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.

பிளாஸ்டிக் பையினால் ஆன ஜெர்ஸியை அணிந்து கொண்டிருந்த அவனது புகைப்படம் இணையத்தளத்தில் வைராலானது.

கால்பந்தை நேசிக்கிறேன், மெஸ்ஸியை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது.

அர்ஜென்டினா கால்பந்தாட்ட கழகமும் மெஸ்ஸியை அகமதி சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்திருந்தது.

தோகா நகரில் நடந்த நட்புரீதியிலான கால்பந்தாட்ட போட்டியின் போது அகமதியை மெஸ்ஸி சந்தித்துள்ளார்

தொடர்ந்து மெஸ்சியின் கையை பிடித்துக் கொண்டு மைதானத்திற்குள் வந்த அகமதியுடன் பார்சிலோனா குழு புகைப்படம் எடுத்துக் கொண்டது.

மைதானத்தின் நடுவில் பந்தை வைக்கும் வாய்ப்பும் அகமதிக்கு வழங்கப்பட்டது.

சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் கரகோஷமிட்டு நன்றி தெரிவித்தனர்.

Image result for messi meet Refugee ahmadi

Image result for messi meet Refugee ahmadi

Image result for messi meet Refugee ahmadi