பிரபல சிங்கள பாடகர் தனுஷ்கவுக்கு பிணை. (UPDATE)

நீதிமன்றத்தில் ஆஜராகிய தனுஸ்கவை தலா 25 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

பிரபல சிங்கள பாடகர் தனுஷ்க நீதிமன்றில் ஆஜர்.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாடகர் எம்.ஜீ.தனுஷ்க, நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை(04) சரணடைந்துள்ளார்.

அவர் சரணடைந்த காரணத்தால், அவரை கைதுசெய்யும்படி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீள்  விசார​​ணைக்குட்படுத்த கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, தீர்மானித்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகரான எம்.எஸ்.பெர்னாண்டோவின் பாடல்களை பாடவேண்டாம் என ஏற்கெனவே  தனுஷ்கவுக்கு தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவு தொடர்பான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரை கைது செய்யுமாறு நேற்று புதன்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.