பிரபல சிங்கள மொழிப் பாடகர் ரோய் பீரிஸ் காலமானார்…

பிரபல சிங்கள மொழிப் பாடகர் ரோய் பீரிஸ் இன்று(21) காலமானார்.

திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இன்று காலை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.