(FASTGOSSIP | COLOMBO) – பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(02) உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் (79). சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமையும் குறிபிடத்தக்கது.
மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய் சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.