பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி உள்ளிட்ட 9 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி உள்ளிட்ட 9 பேர் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (12) முன்னிலையாகியிருந்தனர்.

2010 ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின்  ஆரம்ப விழாவின் போது  இடம்பெற்ற நடன நிகழ்ச்சிகளுக்காக 150 இலட்சம் ரூபா செலவிடப்பட்ட முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக குறித்த 9 பேரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.