இளம் தலைமுறை பிரபல சிங்கள பாடகரான திலங்க விதுஷ தலங்கம இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவல நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.
Update Time : 12:32 Pm
சிலி 25ம் திகதி வரை விளக்கமறியலில்..
பிரபல பாடகர் ‘சிலி’ கைது.
இளம் தலைமுறை பிரபல சிங்கள பாடகரான ‘சிலி’ என்று அழைக்கப்படும் திலங்க விதுஷ தலங்கம பொலிசாரினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தலங்கம பிரதேசத்தில் வைத்து பேரூந்து சேவையாளர் ஒருவரை தாக்கினார் என தலங்கம பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே இவ்வாறு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலி இன்று(11) தலங்கம பொலிசில் சரணடைந்த நிலையிலேயே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.