(FASTNEWS | COLOMBO) – பிரபல பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா 2006-ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா பணியாற்றினார். சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்படுள்ளார்.
குறித்த இந்த விருது வழங்கும் விழா எதிர்வரும் டிசம்பர் 3-ம் திகதி நியூயார்க்கில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.