அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான Tom Petty மாரடைப்பு காரணமாக இன்று(03) காலமானார்.
அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் Tom Petty பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட இவர், ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார்.
Tom Petty இன் பாடல் பதிவுகள் 8 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகி சாதனை படைத்திருக்கிறது. கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2002-ல் ராக் அண்ட் ரோல் ஹால் ஆப் பேம் பட்டியலில் அவர் இடம்பெற்றார்.
அவரது மறைவால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இசைத்துறையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.