பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடீனின் எந்தவொரு உடற்பாகங்களும் தமது கல்லூரியில் இல்லை –நெவில் பெர்னாண்டோ.

பிரபல றக்பி வீரர்  வஸீம் தாஜுடீனின் எந்தவொரு உடற்பாகங்களும் தமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டதாக எந்தவொரு பதிவுகளும் இல்லை என மாலபே மருத்துவக் கல்லூரியின் தலைவர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

உரிய அதிகாரிகளின் ஆவணப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் உறுதிப்படுத்தல்களின் ஊடாகவே ஏனைய உடற்பாகங்கள் தமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தாஜுதீன் உடற்பாக விநியோகத்தில் தமது கல்லூரிக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதுடன், கிடைக்கப்பெறும் ஏனைய உடற்பாகங்கள் கல்லூரியின் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை கற்றல் நடவடிக்கைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் மாலபே மருத்துவ கல்லூரியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் வஸீம் தாஜுடீனின் உடற்பாகங்கள் தமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் எந்தவொரு பதிவுகளும் இல்லை எனவும் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் வஸீம் தாஜுடீனின் உடற்பாகங்கள் மாலபே மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டுள்ளமை குறித்தும் விளக்கமளிக்கும் வகையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இது  தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.