நாட்டிலுள்ள பிரபல பாடசாலைகளில் குறிப்பிட்ட 11 பாடசாலைகளுக்கு 2017ம் ஆண்டுக்கு முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களது பெயர் பட்டியல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு சார்ந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
அதன்படி; கொழும்பு ஆனந்த, நாலந்தா,விஷாகா,நுகேகொட அனுலா,கண்டி தர்மராஜ,கண்டி பெண்கள் கல்லூரி,குருநாகல மலியதேவ,மலியதேவ பெண்கள் கல்லூரி,காலி மஹிந்த,சங்கமித்தா மற்றும் மாத்தறை ராஹுல ஆகிய பாடசாலைகளே இதில் உள்ளடங்குகின்றன.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்செர்க்கும் 2016/17 சுற்றறிக்கைக்கு அமைவாக பெற்றோர்களது கையொப்பத்துடனான முறையற்ற ஆவணங்கள் சாட்சியங்களாக முன்வைக்கப்படும் இடத்து குறித்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
மேலும், குறித்த மாணவருக்கு அவரது பிரதேச எல்லைக்குள் பாடசாலை ஒன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.