பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கி, அடையாள அட்டை மாயமானது எப்படி??

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கியும், அவரது அடையாள அட்டையும் மாயமாகியுள்ளது. இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் பார்வைக்கு வந்தது.

இதில், பிரபாகரனின் கைத்துப்பாக்கி மற்றும் அடையாள அட்டை இடம்பெறவில்லை.

அது காணாமல் போனதா? அழிக்கப்பட்டதா? அல்லது உயர் அதிகாரிகள் யாரேனும் எடுத்து வைத்துள்ளனரா என்பது குறித்த எந்த கேள்விக்கும் இலங்கை ராணுவத்திடம் பதில் இல்லை.

இந்த தகவல் தமிழீழ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.