”No fire zone” ஆவணப்படத்தை வெளியிட்டவருக்கு மலேசிய நீதிமன்றத்தால் விடுதலை

 

இலங்கை குறித்த ”No fire zone” ஆவணப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை ஆர்வலரை குற்றமற்றவர் என மலேசிய நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ”No fire zone” ஆவணப்படத்தை தணிக்கை குழுவின் அனுமதியின்றி வெளியிட்டார் என சாட்டி லீனா ஹென்றி என்ற மனித உரிமை ஆர்வலர் மீது மலேசிய பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன், அவருக்கு எதிராக திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் கீழ் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வழக்கினுடைய குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மைகள் உரிய முறையில் நீரூப்பிக்க தவறியுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக  நீதிபதி மொஹட் ரிஹெப் மொஹட் அரீஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், குற்றச்சாட்டு நிரூபிக்க பட்டிருக்கும் பட்சத்தில் லீனா ஹென்றி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 300,000 மிலேசிய ரிங்கிட்டை அபராதமைாக செலுத்த நேர்ந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மலேசிய நீதிமன்றத்தின் தீர்ப்பை லீனா ஹென்றி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதிப் பணிப்பாளர் பில் ரொபேட்சன் ஆகியோர் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.