பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

(FASTNEWS|COLOMBO) – பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 03 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

51 தீயணைப்பு வாகனங்களில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் 3 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.