பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் இலங்கை விஜயம்…

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான ‘ஒவேர்க்னே’ கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(03) வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளும் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

142 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 600 தொன்கள் எடையினை சுமந்து செல்லக்கூடியதும் 142 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை(06) நாட்டை விட்டு புறப்படவுள்ளது. இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள் இலங்கையிலுள்ள காலத்தில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.