பிரான்ஸ் பள்ளி பேருந்து மீது ரயில் மோதியதில் 4 மாணவர்கள் உயிரிழப்பு…

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பள்ளி பேரூந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் பேருந்து இரண்டாகப் பிளந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரயில் வரும் போது சிவப்பு விளக்கை பேருந்து சாரதி சரியாக கவனிக்காததே விபத்துக்கு காரணமாக இருக்கும் என பொலிசார் முதற்கட்ட தகவல் அளித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.