பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்…

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இரண்டு நாள் விஜயமாக இன்று(05) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பிரித்தானியா இராஜாங்க அமைச்சர் தமது இலங்கை விஜயத்தில் நல்லிணக்கம், வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என்றும் பிரித்தானியா உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது.