பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராக பணி புரியும் அமாரி விஜேவர்தன அவரது பதவி இராஜினாமா குறித்த கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதி முதல் பதவியிலிருந்து அவர் விலகுவதாக குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதோடு, ஜனாதிபதியினால் குறித்த கடிதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அமாரி விஜேவர்தனவை குறித்த பதவிக்கு நல்லாட்சி அரசாங்கம் நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma