(ஃபாஸ்ட் நியூஸ் | பிரித்தானியா) – எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பிரித்தானியாவில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தொடர்ந்து பிரித்தானியாவில் பாடசாலைகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன, மேலும் ஜூன் மாதத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது ‘தேசிய முன்னுரிமை’ மற்றும் அனைத்து மாணவர்களும் மீண்டும் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என அரசாங்கம் விரும்புவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறப்பது சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும், தொற்றுநோயால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்த போதிலும் அவை பாதுகாப்பாக செயல்பட முடியும் என்றும் போரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் உள்ளூர் ஊரடங்கு அமுமல்படுத்தும் போது உணவகங்கள், விடுதிகள் மற்றும் கடைகளுக்கு பின் கடைசியாக தான் பாடசாலைகளை மூட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
பாடசாலைகள் மூடப்பட்டதால் வேலை செய்ய முடியாத பெற்றோர்களுக்கான பொருளாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன, மேலும் குழந்தைகள் கல்வியைத் தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்றும் பிரதமர் எச்சரித்திருந்தார்.