பிரித்தானியா, மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தக்குதலில் பலர் பலியானதை கொண்டாடிய ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 19-பேர் பலியாகியுள்ளனர். 59 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதல் என பிரித்தானியா பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே இணையத்தில் முகமூடி அணிந்த ஐஎஸ் அமைப்பாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் அவன் கூறியதாவது, அல்லாஹ்வின் பெயரால், இரக்கம் மற்றும் நன்றியுடன், இதுதான் ஆரம்பம். ஐ.எஸ் ஜிகாதிகள் புனிதப்போரை தொடங்கிவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
குறித்த வீடியோ;