புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டுவாரிஸ் இன்று (10) இலங்கையின் வியாபார சமூகத்தை சந்திக்கவுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளத்தின் பிரிட்டன் கிளையும் வர்த்தக சம்மேளனத்துக்கான ஆலோசனைக்கூடமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இச்சந்திப்பு ஹில்ட்டன் ரெஸிடன்ஸ் ஹோட்டலில் இன்று (10) காலையுணவின் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடம்பெறவுள்ள இச்சந்திப்பின் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூகத்தினரை அறிந்து கொள்ள முடிவதுடன், புதிய வர்த்தக தந்திரங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்.
மேலும், இலங்கைக்கும் பிரிட்டனுக்குமிடையில் சிறந்த வர்த்தக உறவினை பேணிக் கொள்ள முடியும்.
முன்னர் கொழும்பிலுள்ள ‘லண்டன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய தெற்காசிய அலுவலகத்தின்’ பதில் தலைவராகவும் பிரதி தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டக் கூடியது..