பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமண விழா ஏற்பாட்டில் முக்கிய மாற்றம்…

பாலிவுட் நடிக பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதால் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரியங்கா சோப்ராவும், ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனசும் காதலித்து வருகிறார்கள். இவர்களது திருமணம் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி ராஜஸ்தானில் நடக்கிறது.

ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா ஒரு இணைய தொடரில் நடித்து பிரபலமானவர். எனவே பிரியங்காவின் திருமணம் உலக அளவில் பிரபலமான திருமணமாகிவிட்டது.

இந்தநிலையில் திருமண விழா ஏற்பாட்டில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருமணத்தை ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள உமைத் பவனில் நடத்துவது எனத் திட்டமிடப்பட்டதோடு, சங்கீத நிகழ்ச்சி மற்றும் மெகந்தி சடங்குகளை ஜோத்பூரில் உள்ள மேரான்கர் கோட்டையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் செய்யட்டுள்ளது.

உதய்பூரில் தேர்தல் நடக்க இருப்பதால் உமைத் பவன் மேரான்கர் கோட்டை இடையே திருமண ஊர்வலம் நடந்தால் தங்களால் போதிய அளவு பாதுகாப்பு வழங்க முடியாது எனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஒரே இடத்திலேயே இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்த பிரியங்கா தரப்பு தற்போது முடிவெடுத்துள்ளது.