துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியத் பந்து விக்ரம, பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.
ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு அமைய அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பந்து விக்ரம, துறைமுக அதிகார சபையின் தலைவராக இருந்த போது, நிறைவேற்றுப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு துறைமுக ஊழியர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக பந்து விக்ரம, இன்று காலை 9.30 அளவில் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.