‘பிரெக்ஸிட்’ காலக்கெடு நீடிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு…

(FASTNEWS|COLOMBO) பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று முடியவுள்ள நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் மசோதா ஒன்றை நிறைவேற்றி அதற்கு ராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றனர்.

இதனால் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் தெரசா மே கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.