பிரேசில் நாட்டில் உள்ள மினாஸ் ஜெரேஸ் மாநிலத்தில், ஜனாவ்பா நகரிலுள்ள ஆரம்ப பாடசாலைக்கு காவலாளி வைத்த தீயில் ஆசிரியை மற்றும் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 25 பேர் உடல் கருகி தீக்காயம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனவும் அனைவரும் 4 முதல் 5 வயதுக்குட்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று(05) அந்த பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குழந்தைகள், ஆசிரியைகள், அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் காவலாளி பள்ளிக்கு தீவைத்தது தெரியவந்துள்ளது.