பிரேசில் தூதரகம் ஜெருசலமிற்கு மாற்றம்…

இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக, பிரேசிலில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தேர்வான ஜயிர் போல்ஸ்னோரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள பிரேசில் தூதரகம் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபரின் இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார்.