சுதந்திர கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஏற்பட்ட பதற்ற நிலைக்கு பின்னர் மைதான ஓய்வறையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதற்கு நட்டஈடு வழங்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாகி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
“பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களால் தவறு நடந்தமையினை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஷகீப் அல் ஹசனினால் கண்ணாடி உடைக்கப்பட்டதனையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆதலால், அவர்கள் கண்ணாடிக்காக நட்டஈட்டினை வழங்க முன்வருவதாக தெரிவித்திருந்தனர்.. பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனத்திற்கு நாங்கள் குறித்த செலவுகளை அறிவிப்போம். நான் நினைக்கிறேன் ரூ.150,000-200,000 இடையில் செலவாகும் என்று… எனினு, சரியாக நாம் கணக்கிடவில்லை.” என ஏஷ்லி டி சில்வா தெரிவித்திருந்தார்.