(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை நாட்டைப் பொறுத்தமட்டில் ஏனையவர்களை விடவும் தமிழர்கள் மத்தியில் நிலவும் தாழ்வு மனப்பான்மையே அவர்களது வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ம் திகதி இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தாம் உண்மையை கூறுவதன் காரணமாகவே தனக்கு எதிராக சர்ச்சைகள் கிளப்பப்படுவதாகவும், நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளானது அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டதாகவும் முத்தையா முரளிதரன் மேலும் குறிப்பிட்டிருந்தார்.