பிலிப்பைன்சில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழப்பு…

பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவை ஒட்டியுள்ள ஆக்கிடெண்டல் மிண்டோரோ மாகாணம் பகுதியில், ஒரு குறுகிய பாலத்தை கடக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்புகளில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துக்கு சாரதியின் கவனக்குறைவு காரணமா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.