பிலிப்பைன்சில் மங்குட் புயல் தாக்கியதையடுத்து பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று கடுமையாக வீசுவதால் சேதம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விமான போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘மங்குட்’ புயல் பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. அது இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.