பிலியந்தலை துப்பாக்கிப் பிரயோகம் – கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

பிலியந்தலை பகுதியில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெக்கிராவ பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று(11) இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 9ம் திகதி போதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும், பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர்.

இந்தநிலையில், முன்னதாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 மற்றும் 27 வயதான இருவர் அகுங்கல்ல – தர்கா நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)