பிலியந்தலை – மஹரகம வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த இந்த வீதியில் திருத்தப்பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிலியந்தலை – மஹரகம வீதியானது இரவு 9 மணி தொடக்கம் காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாற்று வீதிகளான கொழும்பு – ஹொரண பிரதான வீதியின் கட்டுவாவல சந்தியிலிருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை வீதி ஊடாக மஹரகம நகர் நோக்கி பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.