பிளாஸ்டிக் அரிசியினை இலகுவில் அறிந்து கொள்வது இப்படித்தானுங்க..

பிளாஸ்டிக் அரிசியின் ஊடுருவல் இலங்கையில் இல்லாது இருப்பினும் அது பற்றி நாம் அறிந்திருப்பது சாலச் சிறந்தது.

இருப்பினும் தற்போது ஒரு தற்காப்பு முயற்சியாக, பிளாஸ்டிக் அரிசி ஒரு வேலை நமக்கு வந்து விட்டது என நம் மனதில் ஒரு சலனம் வந்து விட்டால். அவற்றை எப்படி சரியான அரிசியா அல்லது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டு கொள்ளலாம் என நோக்குவோம்.

தீ சோதனை:

இது ஒரு எளிமையான மற்றும் உடனடியான முடிவுகளை கொடுக்கும் ஒரு சோதனை. நாம் பிளாஸ்டிக் அரிசி என நாம் சந்தேகப்படும் அரிசியை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து அதன் மேல் வைக்க வேண்டும். இப்போது அந்த அரிசி உருகி, ஒரு வித பிளாஸ்டிக் நாற்றத்தை வெளியிட்டால் அது பிளாஸ்டிக் அரிசி என கண்டு கொள்ளலாம்

நீர் சோதனை:

இதுவும் ஒரு இலகுவான சோதனை தான். இதற்கு நாம் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நீர் ஊற்ற வேண்டும். இப்போது நாம் நல்ல அரிசியையும், பிளாஸ்டிக் அரிசி என சந்தேகப்படும் அரிசியையும் ஒரு கப்பில் கலந்து பின் அந்த கலந்த அரிசியை நான் எடுத்து வைத்திருந்த நீர் நிரம்பிய கிண்ணத்தில் போட வேண்டும். பிளாஸ்டிக் அரிசி அடர்த்தி குறைவு என்பதால் அது மேலே மிதக்க ஆரபிக்கும்.நல்ல அரிசி அடியில் தங்கி விடும். சில சமயங்களில் நல்ல அரிசியுடன், பிளாஸ்டிக் அரிசியும் கலந்து விற்கப்பட்டால் இந்த சோதனை அவற்றை கண்டறிய மிகவும் பயன்படும்.

பூஞ்சை சோதனை:

இந்த சோதனைக்கு, நாம் அரிசியை நன்கு கொதிக்க வைத்து 2 அல்லது 3 நாட்கள் அந்த அரிசியை, கொதிக்க வைத்த நீருடன் ஓரிடத்தில் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். மீண்டும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து பார்த்தால், அவை கொதிக்கவைக்கப் பட்ட சூடு நீரில் வெந்த நல்ல அரிசியாக இருந்தால் அவற்றில் பூஞ்சை பிடித்திருக்கும் ஏனெனில் நீரில் வேக வைக்கப் பட்ட நல்ல அரிசி சாதம் திறந்த நிலையில் இருக்கையில் அது வெளி மண்டலத்தில் வினை புரிந்து பூஞ்சையாக மாறும். பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் எதுவும் நடந்திருக்காது, ஏனெனில் அவை வெளி மண்டலத்தில் வினை புரிவதில்லை.

எண்ணெய் சோதனை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணையை ஊற்றி, அடுப்பை பற்ற வைத்து அந்த வாணலியை அதில் வைக்கவும். பிறகு, அந்த எண்ணெய் சுமாராக 200 டிகிரி கொத்தி நிலை வந்தவுடன். நம்மிடம் இருக்கும் அரிசியை அதில் போடவும் . நம்மிடம் இருக்கு அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கும் பட்சத்தில் அவை அந்த சூட்டில் உருகி வாணலியில் அடிப்பாகத்தில் ஒரு அடுக்காக ஒட்டிக் கொள்ளும்.

 

(rizmira)