பிளாஸ்டிக் பைக­ளுக்குத் தடை – மீறினால் 4 வருட சிறை..

கென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு நேற்று(28) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிளாஸ்டிக் பைகளை விற்பதோ அல்லது  உற்பத்தி செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால், 38,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தண்டப் பண விதிப்பை அல்லது 4 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவே பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கென்ய மக்கள் ஒரு மாதத்துக்கு 24 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.