கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கொழும்பு, இரகசிய பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கத்தோலிக்க ஆலயமொன்றின் முன்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணை நிமித்தமே அவர் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(riz)